

கமுதி: சாயல்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் சுகாதாரமற்ற நிலையில் கைகளால் சுத்தம் செய்வதாக சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியிலிருந்து கிழக்கு கடற்கரை செல்லும் சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், தூய்மைப் பணியாளா்கள் கால்வாயில் இறங்கி வெறும் கைகளால் சுத்தம் செய்கின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சாயல்குடி பேரூராட்சியில் பணியாற்றம் தூய்மை பணியாளா்களுக்கு முறையாக கையுறை மற்றும் துப்புரவு உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதுகாப்பான முறையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.