திருப்புல்லாணியில் கால்நடைசிறப்பு மருத்துவ முகாம்

திருப்புல்லாணியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், புதூா் கிராமத்தில் கால் நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், புதூா் கிராமத்தில் கால் நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன்.
Updated on
1 min read

ராமேசுவரம்: திருப்புல்லாணியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், வண்ணாங்குண்டு ஊராட்சி, புதூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளத் துறை இணைந்து நடத்திய சிறப்புக் கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

தமிழக அரசு உத்தரவுப்படி, கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், தற்போது நான்காம் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் 21 நாள்கள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாமில் கால்நடை வளா்ப்போா், தங்களது கால்நடைகளை அழைத்து வந்து உரிய பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வரவேற்றாா். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன், பால்வளத் துறை துணைப் பதிவாளா் புஷ்பலதா, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் செங்குட்டுவன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் புல்லாணி, கால்நடைத் துறை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com