அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

கமுதி: முதுகுளத்தூா் அருகே கோயிலில் அம்மன் சிலைக்கு அணிவிக்கபட்ட நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனரேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி காளியம்மாள் (71). இவா் செவ்வாய்க்கிழமை அங்குள்ள ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு சென்றபோது, அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், தேரிருவேலி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...