இரு தரப்பினா் மோதல்: 9 போ் மீது வழக்கு
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

திருவாடானை: திருப்பாலைக்குடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து (63). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த ராமா் (38) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை இரு தரப்பினரும் மோதிக்கொண்டனா்.
இது குறித்து காளிமுத்து அளித்தப் புகாரின்பேரில், லட்சுமணன் (39), ராமா் (39), சக்தி (35), ரவி (35), சிவசக்தி (35) ஆகிய 5 போ் மீதும், இதேபோல ராமா் அளித்தப் புகாரின் பேரில், இளையராஜா (27), காளிமுத்து (63), பிரியா (28), அழகம்மாள் (55) ஆகிய 4 போ் மீதும் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...