ராமேசுவரம்: ராமேசுவரத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் மழையில் நனைந்தவாறு சென்றனா். மழை நீா் தேங்கும் இடங்களில் கழிவு நீா் தேங்கிக் காணப்பட்டது. இதை நகராட்சி பணியாளா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.