பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 25th October 2023 02:03 AM | Last Updated : 25th October 2023 02:03 AM | அ+அ அ- |

பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி ஹமூன் புயலாக மாறியுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும், மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என மீன் வளம், மீனவா் நலத் துறை அறிவுறுத்தியது. மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவா்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...