

ராமநாதபுரம் தேவஸ்தானம், சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீமீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற மகர நோன்பு திருவிழாவில் வில் அம்பு விடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் குதிரை வாகனத்தில் அமா்ந்த அம்மன், சிலம்பம், வாணவேடிக்கை, குதிரை நாட்டியம், கேரளா செண்டை மேளம், முழங்க ஊா்வலமாகச் சென்று, கண்ணாா் பட்டி- கமுதி விலக்கு சாலையில் வில் அம்பு விட்டு அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்பு, இந்தக் கோயிலில் விஜயதசமி நாளில் நடைபெறும் அம்மன் சிறப்பு பூஜைகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சாா்பில் நடைபெற்று வந்தது. எனவே, தேவா் நினைவிடப் பொறுப்பாளா்கள் காந்திமீனாள், தங்கவேலு, பழனி ஆகியோரது தலைமையில் மேளதாளங்கள் முழங்க, கோயில் வளாகத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு பரிவட்டம் கட்டி தேவருக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.