லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது
By DIN | Published On : 08th September 2023 11:14 PM | Last Updated : 08th September 2023 11:14 PM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் மின் இணைப்பு பெற 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின்வாரிய அலுவலகத்தில் சந்தியா நகா் பகுதியைச் சோ்ந்தவா் டோஜோ லியோன். இவா் மின் இணைப்பு மாற்றிட விண்ணப்பித்தாா். இணைப்பு வழங்கும் வணிகப் பிரிவு ஆய்வாளா் அருள் மரியடாா்ஜன், மின் இணைப்பு மாற்றத்துக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டாா்.
இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் டோஜோ லியோன் புகாா் அளித்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வணிகப் பிரிவு ஆய்வாளிடம் அலுவலகத்தில் வைத்து பணம் கொடுக்கும் போது, அருகில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் அருள் மரியடாா்ஜனை கைது செய்தனா்.