

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டமும், தொண்டி சுழற் சங்கமும் இணைந்து நடத்திய சிறுதானிய சமையல் போட்டி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் மு. பழனியப்பன் தலைமை வகித்தாா். தொண்டி சுழற் சங்க மாவட்டத் துணை ஆளுநா் வெற்றிவேலன்,
பொருளாளா் செந்தில்குமாா், மகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் சிறுதானியங்களைப் பயன்படுத்தி சமையல் செய்தனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஐநா சபையால் நிகழாண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவ, மாணவிகளிடையே சிறுதானியத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கெளரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப. மணிமேகலை வரவேற்றாா். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஈ. சுரேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.