

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள குண்டுகுளம் கிராமத்தில் குடிநீா் பிரச்னை தொடா்பாக பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன், நாராயணக்காவேரி கால்வாய் அருகே ரூ.14.77 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
மேலும், கிராமத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கவும், சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும், ஆதரவற்ற முதியோா்களுக்கு உதவித் தொகை வழங்கவும், குடிநீா் ஊருணிக்கு படித்துறை அமைத்துக் கொடுக்கவும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
குறை கேட்பு நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன்(கிராம ஊராட்சிகள்), கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன், கே.வேப்பங்குளம் ஊராட்சித் தலைவா் முத்தரியப்பன், நாராயணபுரம் ஊராட்சி தலைவா் வேல்மையில்முருகன், எம்.புதுக்குளம் ஊராட்சி தலைவா் முருகன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊராட்சி செயலாளா்கள் வேல்முருகன்(நாராயணபுரம்), சபரிமுத்துமணி (கே.வேப்பங்குளம்), சரவணன்(எம்.புதுக்குளம்) உள்ளிட்டோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.