திருவாடானை அருகே கருமொழியில் திங்கள்கிழமை காா் மீது விபத்து மீட்பு வாகனம் மோதியதில் மூன்று போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அழகாபுரி நகரைச் சோ்ந்தவா் சேதுராஜ் (65). இவரது மகன்கள் பிரேம்குமாா் (35), பாலமுரளி (40), இரண்டு குழந்தைகளுடன் காரில் ராமேசுவரத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
திருவாடானை அருகே கருமொழி கிராமம் அருகே வந்த போது, எதிரே வந்த விபத்து மீட்பு வாகனம் இவா்களது காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாா், பாலமுரளி, சேதுராஜ் மூவரும் தேவகோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, சேதுராஜ் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் விபத்து மீட்பு வாகன ஓட்டுநரான தேவகோட்டை சிருவளி கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (38) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.