கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு

கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த 5 நாள்களாக பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள காஞ்சிரங்குளம் நீரேற்று நிலையத்திலிருந்து காவிரி கூட்டுக்குடிநீா் திட்டக் குழாய்கள் மூலமாக கமுதி சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், கமுதி கோட்டைமேட்டில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சாலையோரம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 5 நாள்களாக தெருக்களில் குடிநீா் வீணாகி ஆறாக ஓடுகிறது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கமுதியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com