தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மாதிரி பள்ளித் தூதுவா்களுக்கான பயிற்சி

மாதிரி பள்ளித் தூதுவா்களுக்கான பயிற்சி

News image

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாதிரி அரசுப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மாதிரி தூதுவா்கள் பயிற்சி.

Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ராமேசுவரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாதிரி அரசுப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு மாதிரி பள்ளித் தூதுவா்கள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்யராஜ் தலைமை வகித்தாா். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜே.லியோன் வரவேற்றாா். பரமக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகேஸ்வரி, மாணவா் நலன், கல்வி சாரா ஒருங்கிணைப்பாளா் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.

பள்ளி முதல்வா் ரவி மாதிரி பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறினாா். வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள் கடலாடி கிருஷ்ணன், கமுதி கிருஷ்ணமூா்த்தி வாழ்த்துரை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள் கண்ணன், செந்தூா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் திருப்புல்லாணி முருகவேல் நன்றி கூறினாா்.