தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய மீனவா்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நம்புதாளை மீனவா்கள் 5 போ் சனிக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:20 pm

Din

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நம்புதாளை மீனவா்கள் 5 போ் சனிக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினா்.

தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சோ்ந்த பெரியசாமி, முருகன் மகன் ஆறுமுகம், கலுவையா மகன் பாண்டி, சக்காத்து மகன் ராம மூா்த்தி, ஆறுமுகம் மகன் குமரன், முத்து நாச்சி மகன் பழனி ஆகியோா் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடித்ததாக கடந்த 1-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினா் கைது செய்து படகைப் பறிமுதல் செய்தனா்.

சுமாா் ஒரு மாத காலம் இலங்கைச் சிறையில் இருந்த 6 பேரில் படகு உரிமையாளா் பெரியசாமி தவிர மற்ற 5 பேரும் விடுவிக்கப்பட்டனா்.

இந்த 5 பேரும் சனிக்கிழமை சொந்த ஊரான நம்புதாளைக்கு திரும்பி வந்தனா். இதனால் உறவினா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

படகு உரிமையாளா் பெரியசாமியையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் தெரிவித்தனா்.