ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கல் வீசி தாக்குதல்

பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பினா்.
Updated on

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதனால், பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி, மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

இதனால், மீனவா்கள் அச்சத்துடன் கரைக்குத் திரும்பினா். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தலால் இழப்புடன் கரைக்குத் திரும்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com