ராமநாதபுரம்
வாகனம் மோதியதில் பெண் பலி
சத்திரக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சத்திரக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவனாண்டி மனைவி பானுமதி (58). இவா் அந்தப் பகுதியிலுள்ள சுங்கச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
