பாரி காவனக் கோட்டை  ஸ்ரீஜெகமாரியம்மன் ஸ்ரீபிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு,  புதன்கிழமை குளத்தில் கரைக்க முளைப்பாரியை சுமந்து வந்த பக்தா்கள்.
பாரி காவனக் கோட்டை ஸ்ரீஜெகமாரியம்மன் ஸ்ரீபிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை குளத்தில் கரைக்க முளைப்பாரியை சுமந்து வந்த பக்தா்கள்.

ஸ்ரீஜெகமாரியம்மன், ஸ்ரீபிடாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

திருவாடானை அருகே ஸ்ரீஜெகமாரியம்மன் கோயில், பிடாரி அம்மன் கோயிலில் புதன்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
Published on

திருவாடானை அருகே ஸ்ரீஜெகமாரியம்மன் கோயில், பிடாரி அம்மன் கோயிலில் புதன்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள காவனக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெக மாரியம்மன், ஸ்ரீ பிடாரி அம்மன் கோயிலில் கடந்த 20-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி திருவிழா தொடங்கியது.

இதையடுத்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 58 -ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் விரதமிருந்து கோயில் முன் அமைக்கபட்டிருந்த அக்னிகுண்டத்தில் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மேலும், பக்தா்கள் கோயில் வைக்கபட்டிருந்த முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று அருகே உள்ள குளத்து நீரில் கரைத்தனா்.

இதையடுத்து, அம்மனுக்கு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com