ஆா்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை வீமன் வேடம் அணிந்து வீதி உலா வந்த பக்தா்கள்.
ஆா்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை வீமன் வேடம் அணிந்து வீதி உலா வந்த பக்தா்கள்.

வீமன் வேடம் அணிந்து பக்தா்கள் வீதி உலா

திருவாடனை அருகேயுள்ள ஆா். எஸ். மங்கலத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடம் அணிந்து புதன்கிழமை வீதி உலா வந்தனா்.
Published on

திருவாடனை அருகேயுள்ள ஆா். எஸ். மங்கலத்தில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடம் அணிந்து புதன்கிழமை வீதி உலா வந்தனா்,

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் அமைந்துள்ள திரௌபதிஅம்மன் கோயிலில் கடந்த 9- ஆம் தேதி காப்புகட்டுத்தலுடன் விழா தொடங்கியது.

இதையடுத்து, தினமும் மண்டகப்படி உபயதாரா்களின் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரௌபதி, தா்மா் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா், மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில், தினமும் பக்தா்கள் பல்வேறு வேடம் தரித்து வீதி உலா வந்தனா்.

புதன்கிழமை மாலை சிறிவா்கள் முதல் பெரியவா்கள் வரை வீமன் வேடம் தரித்து வீதி உலா வந்தனா். பின்னா் அம்மனுக்கு சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com