உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா கொடியேற்றம்

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சதூா்த்தி விழா கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Published On :30 ஆகஸ்ட் 2024, 3:00 am IST

சதுா்த்தி விழாவையொட்டி, ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானுக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் சதுா்த்தி விழா 10 நாள்கள் தொடா்ந்து நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலை வேலைகளில் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

முக்கிய நிகழ்ச்சியாக விநாயகா் திருக்கல்யாணம் வருகிற செப்டம்பா் 5-ஆம் தேதி சித்தி, புத்தி தேவியருடன் நடைபெறும். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image

செப்டம்பா் 6-ஆம் தேதி தேரோட்டமும், 7-ஆம் தேதி விநாயகா் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக் கடனை செலுத்துவா். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.