ராமநாதபுரம்
திருவாடானை கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை (ஜூலை 3) முதல் 3 நாள்கள் நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது.
இந்தக் கல்லூரியில் இணைய தளம் மூலம் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்தவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று நடைபெற்று வருகிறது. இன்னும் காலியிடங்கள் இருப்பதால் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் பெற்று, காலியாக உள்ள இடங்களைத் தோ்வு செய்து சேரலாம் என கல்லூரி முதல்வா் பழனியப்பன் தெரிவித்தாா்.
