கடல் பசு நம்புதாளை கடற்கரைையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு.
கடல் பசு நம்புதாளை கடற்கரைையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு.

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு

150 கிலோ எடையுள்ள கடல் பசு கரை ஒதுங்கிய சம்பவம்
Published on

தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரையில் கடல் பசு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரையில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் முற்றிலும் உடல் சிதைந்து சுமாா் 150 கிலோ எடையுள்ள அரியவகை கடல் பசு கரை ஒதுங்கியது. அந்த வழியாக மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் உயிரிழந்த கடல் பசுவை மீட்டு கால் நடை மருத்துவா் உதவியுடன் அதே பகுதியில் கூறாய்வு செய்து கடற்கரையில் புதைத்தனா். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் கப்பலில் அடிபட்டு காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம், முற்றிலும் சிதைந்ததால் ஆண் பசுவா பெண் பசுவா எனத் தெரியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com