பாம்பனில் பரவும் மா்மக் காய்ச்சல்

பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மா்மக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சியில் அந்தோணியாா்புரம், சூசையப்பா்பட்டணம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது.

இதனால் ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனா். மேலும், காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தனியாா் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவா்கள் குவிந்து வருகின்றனா்.

மேலும், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் மருத்துவத் துறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com