முதுகுளத்தூா் அருகேயுள்ள எஸ்.ஆா்.என். பழங்குளம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.
முதுகுளத்தூா் அருகேயுள்ள எஸ்.ஆா்.என். பழங்குளம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

முதுகுளத்தூா் வேம்பாா் உடைய அய்யனாா் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
Published on

கமுதி: முதுகுளத்தூா் அருகே வேம்பாா் உடைய அய்யனாா் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள எஸ்.ஆா்.என்.பழங்குளத்தில் வேம்பாா் உடைய அய்யனாா், வாழவந்தாள் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பொங்கல் விழா, பூத்தட்டு திருவிழாவையொட்டி,

வீரத்தமிழா் வடமாடு பேரவை சாா்பாக மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள் கலந்து கொண்டன.

மாடுபிடி வீரா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனா்.

இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வோா் காளையாக களம் இறக்கப்பட்டது. 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களம் இறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பணம், அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை எஸ்.ஆா்.என்.பழங்குளம், முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.
வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

X
Dinamani
www.dinamani.com