தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் சேதமடைந்த பாலத்தில் ஆபத்தை  உணரமால் வரும் சுற்றுலாப் பயணிகள்.
தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் சேதமடைந்த பாலத்தில் ஆபத்தை உணரமால் வரும் சுற்றுலாப் பயணிகள்.

தனுஷ்கோடியில் ஆபத்தான பாலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தனுஷ்கோடியில் உடைந்து விழுந்த பாலத்தில் மறுபகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூடுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

தனுஷ்கோடியில் உடைந்து விழுந்த பாலத்தில் மறுபகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூடுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முதுந்தராயா் சந்திரம் ஆகியப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், முகுந்தராயா்சத்திரம் பகுதியில் கட்டப்பட்டு வந்த டி வடிவ பாலத்தின் ஒரு பகுதி கடல் சீற்றத்தில் காரணமாக இடிந்து கடலுக்குள் விழுந்தது மற்றொரு பகுதி அபாயகரமான நிலையில் உள்ளது. சேதமடைந்த பாலத்தின் மறுபகுதியில் கடல் அலை மோதி 15 அடி உயரம் வரை எழும்புவதால் இதைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தின் விளைவு தெரியாமல் தன்படம் எடுத்துச் செல்கின்றனா்.

எனவே, இந்த சேதமடைந்து பாலத்துக்கு பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் தடுப்பு அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், தனுஷ்கோடி மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com