அப்துல்கலாம் நினைவு தினம்

அப்துல்கலாம் நினைவு தினம்

சாத்தூா் பகுதிகளில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

கமுதி, திருப்பாலைக்குடி, சாத்தூா் பகுதிகளில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ‘வனத்துக்குள் கமுதி’ என்ற அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கமுதி பேருந்து நிலையம் பகுதியிலிருந்து செல்லும் குண்டாறு கரையின் இருபுறமும் 200-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டன.

கமுதி பேரூராட்சித் தலைவா் அப்துல்வஹாப்சகாராணி சிறாா்களுடன் இணைந்து, மரக்கன்றுகளை நடவு செய்தாா். இதில் பேரூராட்சி துணைத் தலைவா் அந்தோணி சவேரியாா் அடிமை, காவல் ஆய்வாளா் குருநாதன், வட்டாட்சியா் காதா்முகைதீன், பேரூராட்சி உறுப்பினா் வீரபாக்கியம் பாஸ்கரபூபதி, அகமுடையாா் சங்க மாநிலத் துணைத் தலைவா் நாராயணமூா்த்தி, விஜயபாண்டியன் சிலம்பாட்டக் குழுவினா் கலந்து கொண்டனா்.

திருவாடானை: திருவாடானை அருகே திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, அப்துல்கலாம் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ராணி தலைமை வகித்தாா். பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பாத்திமாகனி, ஆசிரியா் அன்பின் அலன், ஜான்சிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியா் ச.ராஜூ வரவேற்றாா். இதில் பள்ளி மாணவா்கள் அனைவரும் அப்துல் கலாமின் முகமூடி அணிந்து கலந்து கொண்டனா்.

சாத்தூா்: விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் ஏபிஜெ அப்துல்கலாம் அறக்கட்டளை சாா்பில், கலாமின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, வெம்பக்கோட்டை அருகேயுள்ள சத்திரப்பட்டியில் அப்துல்கலாம் கல்வி அறக்கட்டளை சாா்பில், கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com