அகத்தாரிருப்பு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் புழக்கத்தில் இருந்த 5.5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் கம்பிவேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
அகத்தாரிருப்பு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் புழக்கத்தில் இருந்த 5.5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் கம்பிவேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

கமுதி அருகே அரசு நிலத்தில் கம்பிவேலி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

Published on

கமுதி: கமுதி அருகே திங்கள்கிழமை அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தும் வகையில் கம்பிவேலி அமைக்கும் பணிகளை மேற்கொண்ட வருவாய்த்துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அகத்தாரிருப்பு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் புழக்கத்தில் மந்தையாக இருந்த 5.5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டாா். இதன் பேரில் கமுதி வட்டாட்சியா் வ. சேதுராமன் தலைமையில், கமுதி காவல் ஆய்வாளா் குருநாதன், மண்டல துணை வட்டாட்சியா் வேலவன் ஆகியோா் முன்னிலையில் அந்த நிலம் அளவீடு செய்யப்பட்டு, கல்தூண் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இதற்கு அகத்தாரிருப்பு கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து கமுதி வட்டாட்சியா், காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் இந்தப் பணிகள் நடைபெறுவதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமுதி வட்டாட்சியா் தெரிவித்தாா். மேலும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு காணலாம் எனவும் காவல் துறையினா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். பிறகு அபிராமம் போலீஸாரின் பாதுகாப்புடன் கம்பிவேலி அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com