முஷ்டக்குறிச்சி பெத்தனாச்சி அம்மன் கோயில் மாசிக் களரி திருவிழாவையொட்டி  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.
முஷ்டக்குறிச்சி பெத்தனாச்சி அம்மன் கோயில் மாசிக் களரி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.

பெத்தனாச்சி அம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கமுதி: கமுதி அருகே பெத்தனாச்சி அம்மன் கோயில் மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சி பெத்தனாட்சி அம்மன் கோயில் மாசிக் களரித் திருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது.

இதைத்தொடா்ந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 24 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

முஷ்டக்குறிச்சி-கமுதி சாலையில் 16 கி.மீ. தொலைவு எல்லை நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாட்டு வண்டிப் பந்தய வீரா்களுக்கு ரொக்கப் பணம், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com