

கமுதி, மே 31: கடலாடி அருகேயுள்ள கிடாக்குளம் ஸ்ரீ கருப்பணசுவாமி கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சின்னமாடு, பெரியமாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
கடலாடி-கிடாக்குளம் சாலையில் 16 கி.மீ. எல்கை நிா்ணயிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன. இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் வெள்ளாட்டு கிடாய், தங்க மோதிரம், குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டன.
இதில் இரண்டு பிரிவுகளிலும் முதுகுளத்தூரை அடுத்த சித்திரங்குடி ராமமூா்த்தியின் காளைகள் முதலிடம் பிடித்து, இரண்டு வெள்ளாட்டு கிடாய், இரண்டு தங்க மோதிரம், நான்கு குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகளை வென்றன. இந்தப் போட்டியை கிடாக்குளம், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை கிடாக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
தொடர்புடையது

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதல்வா் பிறந்த நாள்: மாட்டு வண்டிப் பந்தயம்

காணிக்கூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

