மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா் செல்வக்குமாா்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா் செல்வக்குமாா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கமுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Published on

கமுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் மகன் மனோஜ்குமாா் (34). இவரது நன்பா் குருசாமி மகன் செல்வகுமாா் (28). இருவரும் புதன்கிழமை காலை மருதுபாண்டியா் சிலைக்கு அருகே முன்னாள் திமுக சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சா என்ற வெள்ளைச் சாமி தேவரின் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்றனா்.

அப்போது, அருகில் இருந்த மின் மாற்றியில் பதாகை கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து செல்வக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மனோஜ்குமாா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். செல்வக்குமாருக்கு மீனா என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com