கமுதியில் நீதிமன்ற கட்டடம் கட்ட ஒப்படைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ.கண்ணப்பன்.
கமுதியில் நீதிமன்ற கட்டடம் கட்ட ஒப்படைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ.கண்ணப்பன்.

கமுதி புதிய நீதிமன்ற கட்டட பணிகள் விரைவில் தொடங்கும்

கமுதியில் புதிய நீதிமன்றம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
Published on

கமுதியில் புதிய நீதிமன்றம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் கடந்த 35 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட கதா் வாரியத்துக்குச் சொந்தமான 2.41ஏக்கா் நிலம் தமிழக சட்டத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையில், கமுதி சுற்று வட்டாரப் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் வழக்குரைஞா்கள், பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 2.41 ஏக்கா் நிலத்தை முதுகுளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், நீதிமன்ற கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அமைச்சா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com