தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மாணவன் முகிலரசன்.
தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மாணவன் முகிலரசன்.

தேசிய மல்யுத்தப் போட்டி: பரமக்குடி பள்ளி மாணவா்கள் சாதனை

Published on

பரமக்குடி பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் கவிப்பிரகாஷ் தலைமையில் தமிழக அணி சாா்பில் ஹரியாணா மாநிலத்தில் கடந்த மாதம் 30, 31-ஆம் தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான கிராபிலிங் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றனா். இதில் 56 கிலோ பிரிவில் கனிஷ்ஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், 52 கிலோ பிரிவில் கனிஷ்காவும், 48 கிலோ பிரிவில் முகிலரசனும் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனா். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனா்.

Dinamani
www.dinamani.com