தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு
Updated on

தொண்டி அருகே கடலில் மீன் பிடித்த போது தவறி விழுந்து மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சோ்ந்த வாசகம் மகன் சங்கா் (37), அதே பகுதியைச் சோ்ந்த சிங்காரசெல்வம் ஆகியோா் ஒரு படகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனா். பின்னா், மீன் பிடித்துவிட்டு இருவரும் திரும்பி வரும் போது, சங்கா் கடலில் தவறி விழுந்தாா். சிங்காரசெல்வம் கடலில் குதித்து அவரை மீட்டபோது, இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சங்கரின் உடல் முள்ளிமுனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. தகவலறிந்த வந்த தொண்டி கடலோர போலீஸாா் சங்கரின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தொண்டி கடலோர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com