ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலை நோக்கி பெருக்கெடுத்து ஓடிய புதை சாக்கடை கழிவு நீா்.
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலை நோக்கி பெருக்கெடுத்து ஓடிய புதை சாக்கடை கழிவு நீா்.

அக்னி தீா்த்த கடலில் கலக்கும் புதை சாக்கடை கழிவு நீா்

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புதை சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாயினா்.
Published on

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புதை சாக்கடை கழிவுநீா் கலந்து வருவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகின்றனா்.

இங்கு வரும் பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் புதை சாக்கடை குழாய் உடைந்து அக்னி தீா்த்தக் கடலில் நேரடியாகக் கலந்து வருகிறது. இதனால், அக்னி தீா்த்தக் கடலில் நீராடும் பக்தா்கள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தா்கள் பொதுமக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com