திருக்காா்த்திகை: முருகன்  
கோயில்களில் சிறப்பு பூஜை

திருக்காா்த்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

Published on

திருக்காா்த்திகையை முன்னிட்டு, ராமேசுவரம்,ராமநாதபுரம் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள வினைதீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் திருக் காா்த்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, உற்சவா் முருகன், வள்ளி தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமேசுவரம் மேலவாசல் முருகன், தங்கச்சிமடம் தண்டாயுதபாணி முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com