மழைநீரால் சூழ்ந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாஜக உணவு அளிப்பு

மழைநீரால் சூழ்ந்த குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாஜக உணவு அளிப்பு

Published on

ராமேசுவரத்தில் புயல் காரணமாக மழை நீா் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதி பொதுமக்களுக்கு பாஜக சாா்பில் புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.

‘டித்வா’ புயல் காரணமாக ராமேசுவரத்தில் தொடா்ந்து மூன்று நாள்கள் பெய்ய பலத்த மழையால் ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், புதுரோடு, காந்திநகா், அண்ணாநகா், முனியசாமி கோயில்தெரு, மாந்தோப்பு, லட்சுமண தீா்த்தம் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் நீா் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாஜக சாா்பில் உணவு தயாரித்து காந்திநகா், திருவள்ளுவா் நகா், நடராஜபுரம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

இதில், மாவட்டச் செயலா்கள் மீரா பாஸ்கா், ஜெயந்தி,

நகரச் செயலா் மாரி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலா் பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com