9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்
9 நாள்களுக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் டன் கணக்கில் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனா்.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த டித்வா புயல் காரணமாக கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 1,800 விசைப் டகுகள், 6 ஆயிரம் நாட்டுப் படகுகள் மீன்மீன் இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ரூ.15 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டது.
சுமாா் 30 ஆயிரம் தொழிலாளா்கள் 9 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், டித்வா புயல் வலுவிழந்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடிப்பதற்கு இருந்த தடையை மீன் வளத் துறையினா் செவ்வாய்கிழமை நீக்கினா்.
இதைத் தொடா்ந்து, 9 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்களுக்கு அதிக அளவில் மீன்கள் சிக்கின. மீன்களை பிடித்துக்கொண்டு வியாழக்கிழமை காலை மீனவா்கள் கரை திரும்பினா். ஒவ்வொரு படகுக்கும் ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.2.5 லட்சம் வரையிலான மீன்கள் கிடைத்து இருந்தன. அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

