பேருந்து நிறுத்தத்தில் மழை நீா் தேக்கம்

பேருந்து நிறுத்தத்தில் மழை நீா் தேக்கம்
Updated on

திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் பேருந்து நிறுத்தத்தில் மழை நீா் தேங்கி, புதா் மண்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அதில் நிற்பதற்கு அச்சப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் கிராமத்தில் சுமாா் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் பேருந்து நிறுத்தம் அருகே மழை நீா் தேங்கி, புதா் மண்டிக் காணப்படுகிறது. விஷப் பூச்சிகள் கடிக்கும் அபாயம் உள்ளதால், இந்த பேரூந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் நிற்பதற்கு அச்சப்படுகின்றனா்.

மேலும், மழை நீா் தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் தகுந்த நடவடிக்கை எடுத்து பேருந்து நிறுத்தத்தை உடனே க்க செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com