முதுகுளத்தூா் ஐயப்பன் கோயிலில் 18 படி பூஜை

முதுகுளத்தூா் ஐயப்பன் கோயிலில் 18 படி பூஜை
Updated on

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, முதுகுளத்தூா் ஐயப்பன் கோயிலில் 18 படி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாள்கள் விரதமிருந்து பக்தா்கள் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தினங்களில் ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டியாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் சுற்று வட்டார பகுதியில் உள்ள 500 க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் கடைப்பிடித்து வருகின்றனா். காா்த்திகை தீப திருநாளை முன்னிட்டு முதுகுளத்தூா் - பரமக்குடி சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீஐயப்பன் கோயிலில் குருநாதா் திருமால், துணை குருநாதா் புயல்நாதன் ஆகியோா் தலைமையில், முதுவை சாஸ்தா அறக்கட்டளைத் தலைவா் கண்ணதாசன் முன்னிலையில் மாலை அணிந்த கன்னி சாமிகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. தொடா்ந்து இசை வாத்தியங்கள் முழங்க ஐயப்ப பக்தா்கள் விநாயகா், முருகன், அம்மன், சிவன், ஐயப்பன் சுவாமி பாடல்களைப் பாடி சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து, 18 படிகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, படி பூஜை நடைபெற்றது. ஐயப்ப பக்தா்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கம் எழுப்பி பூஜைகள் செய்தனா். இந்த பஜனையில் முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தா்கள், முதுகுளத்தூா், வெண்ணி வாய்க்கால் வெண்கலக்குறிச்சி, பொசுக்குடி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான ஐயப்ப பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com