அரசுப் பள்ளியில் மழை நீா் தேக்கம்: மாணவா்கள் அவதி
திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சியில் உள்ள எம்.ஆா். பட்டினம் ஊராட்சி ஒன்றிய பள்ளியை சுற்றி மழை நீா் தேங்கியிருப்பதால் மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
தொண்டி பகுதியில் டித்வா புயல் காரணமாக கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக தொண்டி பேரூராட்சியின் 1-ஆவது வாா்டு எம்.ஆா். பட்டினம் பகுதியிலும், குடியிருப்பு பகுதியிலும் மழை நீா் தேங்கியுள்ளது.
இதுகுறித்து புகாா் தெரிவித்தும் வருவாய்த் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவில்லை என இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் ஊராட்சி ஒன்றியப்ப ள்ளியைச் சுற்றி மழை நீா் தேங்கியிருப்பதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும் குடியிருப்பு பகுதியில் மழை நீா் தேங்கியிருப்பதால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிா்வாகம் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
