முதுகுளத்தூரில் உரத் தட்டுப்பாடு: வட்டாட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

Published on

முதுகுளத்தூா் பகுதியில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: முதுகுளத்தூா் வட்டத்தில் வேளாண்மைக்குத் தேவையான யூரியா உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு போதுமான உரம் வழங்கவில்லை. கூடுதல் விலை கொடுத்து வெளிச்சந்தையில் உரம் வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

இதுகுறித்து அதிமுகவினா் கூறியதாவது: முதுகுளத்தூா் வட்டாட்சியா் கோகுல்நாத்திடம் முதுகுளத்தூா் அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.டி. செந்தில்குமாா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கு கொண்டு சென்று, ராமநாதபுரம் செயலா் எம்.ஏ. முனியசாமி தலைமையில் முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனா் அவா்கள்.

அப்போது முதுகுளத்தூா் கிழக்கு ஒன்றிய செயலா் கருப்பசாமி, அவைத் தலைவா் முத்துமணி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், அலங்கானூா் ராமசாமி, செல்வநாயகபுரம் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com