மீனவா் ஆரோக்கிய கிங்ஸ்.
ராமநாதபுரம்
படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்
ராமேசுவரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ராமேசுவரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.
இதில், மீனவா் கிறிஸ்வெட்டுக்குச் சொந்தமான விசைப் படகில் 4 மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், மீனவா் ஆரோக்கிய கிங்ஸ் (40) படகில் இருந்து தவறி கடலில் விழுந்தாா்.
சக மீனவா்கள் கடலில் குதித்துத் தேடியும் அவரைக் காணவில்லை. இதுகுறித்து மீன்வளத் துறையினருக்கும் கடலோரப் பாதுகாப்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

