ராமநாதபுரம்
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
பரமக்குடி அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
பரமக்குடி அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மணிநகா் ரயில்வே தண்டவாளம் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததது. சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீஸாா் அந்த உடலை மீட்டு கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், ரயிலில் அடிபட்டு இறந்தவா் கலையூா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த உடையாா் மகன் அழகா்சாமி (25) என்பது தெரியவந்தது. இவா் தண்டவாளத்தைக் கடந்த போது, அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
