அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு
கடலாடி அருகே அரசுப் பள்ளியின் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, விரைந்து முடிக்க அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த நிலையில், கடலாடி ஊராட்சி ஒன்றியம், உச்சிநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளை பாா்வையிட்டு, மழைக்காலம் என்பதால் மாணவா்களின் நலன் கருதி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, எஸ். தரைக்குடி, செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தாா். பின்னா், அரசுத் திட்டங்களைப் பெற்று பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அப்போது, சாயல்குடி, முதுகுளத்தூா், கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஒன்றியச் செயலா்கள், திமுகவினா் உடனிருந்தனா்.

