கமுதி பிள்ளையாா் கோயில் தெருவில் மழை காரணமாக இடிந்து விழுந்த ஓட்டு வீட்டின் சுவா்.
ராமநாதபுரம்
கமுதியில் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயம்
கமுதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமு மனைவி மாரியம்மாள் (62). இவா் தனது வீட்டில் இருந்தபோது, திடீரென வீட்டின் ஒரு பக்க மண் சுவா் இடிந்து அவா் மீது விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா் கமுதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரா்கள் மண் சுவரின் இடுக்குகளில் சிக்கியிருந்த மூதாட்டி மாரியம்மாளை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி சிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது தொடா்பாக கமுதி வருவாய்த் துறையினா், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

