ராமநாதபுரம்
தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சம்
திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடல் பகுதியில் நீா் மட்டம் உயா்வால் மீனவா்கள் அச்சமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, எம்.ஆா். பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 50 அடி தொலைவுக்கு கடல் நீா் வெளியே வந்தது.
இதனால், கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகுகள் கரை ஒதுங்கின. மேலும், திடீரென கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டதால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடையும் வாய்ப்புள்ளதாக மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.
