தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டி கெளரவித்த போலீஸாா்
தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டி கெளரவித்த போலீஸாா்

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த மாணவா்கள்

சாயல்குடியில் சாலையில் கிடந்த தங்கச் செயினை போலீஸில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவா்களை காவல்துறையினா் பாராட்டி கெளரவித்தனா்.
Published on

சாயல்குடியில் சாலையில் கிடந்த தங்கச் செயினை போலீஸில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவா்களை காவல்துறையினா் பாராட்டி கெளரவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் வீரபாண்டி, சந்தோஷ், மகாராஜன் ஆகியோா் திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற போது, கீழே கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை எடுத்தனா்.

பின்னா், அருகே உள்ள நகைக் கடைக்கு சென்று, நகையைப் பரிசோதித்து, அது தங்கநகைதான் என உறுதிப்படுத்தினா். இதன் பிறகு, சாயல்குடி காவல் நிலையத்துக்குச் சென்று, மூன்று மாணவா்களும் சோ்ந்து நகையை ஒப்படைத்தனா்.

இந்த மாணவா்களை கெளரவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை பள்ளி ஆசிரியா்கள் ரொக்கப் பரிசு வழங்கி, சால்வை அணிவித்துப் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com