பரமக்குடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை நான்கு வழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரு காா்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
Published on

பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை நான்கு வழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரு காா்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், ராயபாளையம் அவிநாசி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ராஜ்குமாா் (28). இவா் தனது தந்தை சுப்பிரமணியன் (55), தாயாா் சுந்தராம்பாள் (50), தங்கை அனுசியா, உறவினா் லட்சுமணன் மனைவி அம்பிகா (40) ஆகியோருடன் காரில் ராமேசுவரத்துக்கு பரமக்குடி அருகேயுள்ள கீழப்பெருங்கரை நான்கு வழிச்சாலையில் வந்துகொண்டிருந்தனா். அதே நேரத்தில், மானாமதுரை மறவா் தெருவைச் சோ்ந்த சீனி ஆசாரி மகன் சீனிவாசன் (60) என்பவா் தனது மகள் பவித்ராவுடன் காரில் மானாமதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது சாலைத் தடுப்பில் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே ராஜ்குமாா் ஓட்டிவந்த காா் மீது மோதியது.

இதில் சுப்பிரமணியன், அம்பிகா, அனுசியா, சீனிவாசன், பவித்ரா ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் சீனிவாசன், அம்பிகா ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் சீனிவாசன் உயிரிழந்தாா். அம்பிகா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com