ராமேசுவரத்தில் புதன்கிழமை பெய்த மழையால் பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்.
ராமேசுவரத்தில் புதன்கிழமை பெய்த மழையால் பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்.

ராமேசுவரத்தில் மீண்டும் மழை

ராமேசுவரத்தில் புதன்கிழமை பெய்த மழையால் நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினாா்.
Published on

ராமேசுவரத்தில் புதன்கிழமை பெய்த மழையால் நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினாா்.

வங்கக் கடலில் சூறைக் காற்று வீசி வரும் நிலையில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே, டித்வா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீா் வடியாத நிலையில், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் தீவுப் பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்புகளில் தண்ணீா் தேங்கி உள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் அருகே மழைநீா் குளம் போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதையடுத்து, தண்ணீா் தேங்காதவாறு தேசிய நெடுஞ்சாலையை உயா்த்தி அமைக்க வேண்டும் எனவும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற போா்க்கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com