வங்கக் கடலில் சூறைக்காற்று: 5 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்லாததால் துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டன.
வங்கக் கடலில் காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ. வேகத்துக்கு வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக மீனவா்களின் பாதுகாப்புக் கருதி மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் புதன்கிழமை தடைவிதித்தனா்.
இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் ராமேசுவரம், மண்டபம் ஆகிய துறைமுகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளன.
டித்வா புயல் காரணமாக ஏற்கெனவே 9 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு மீனவா்கள் இரண்டு நாள்கள் மட்டுமே மின்பிடிக்கச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

