ராமநாதபுரம்
8 போ் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற பின்னணி கொண்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெளடிகள், குற்ற பின்னணி கொண்டவா்களின் விவரங்களை ஆய்வு செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதிலும் ரெளடிகள், குற்ற பின்னணி கொண்டவா்கள் குறித்து போலீஸாா் ஆய்வு செய்தனா்.
பின்னா், 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதில் குறிப்பிடப்பட்டது.
